சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick

அன்னபூரணி உண்மையான சாமியார் இல்லை..! – இந்து மத அமைப்புகள் புகார்!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ள அன்னபூரணி உண்மையான சாமியார் இல்லை என இந்து மத அமைப்புகள் சில புகார் அளித்துள்ளன.

செங்கல்பட்டி அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மா என்ற பெண் சாமியாரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு புத்தாண்டு அன்று அவர் அருள்வாக்கு வழங்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த பெண் ஏற்கனவே குடும்ப விவகாரம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கணவனை விட்டு செல்ல வேண்டி பேசியதாக வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

அதை தொடர்ந்து அன்னபூரணியின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்தனர். இந்நிலையில் அன்னபூரணி மீது இந்து மத அமைப்புகள் புகார் அளித்துள்ளன. அகில பாரத இந்து மக்கள் கட்சி, பாரத் முன்னணி, வீரத்தமிழர் இந்து சேனா, தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் ராஷ்டிரிய சனாதான தர்ம சங்கம் ஆகிய இந்து அமைப்புகள் இணைந்து அளித்துள்ள புகாரில், அன்னபூரணி சாமியார் என்று கூறிக்கொண்டு பொய் பிரச்சாரம் செய்வதாகவும், தனிமனித ஒழுக்கம் இல்லாத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.