1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:22 IST)

தஞ்சை கோவிலில் கோரிக்கை மனு கொடுத்த இந்து முன்னணியினர்!

தஞ்சை கோவிலில் கோரிக்கை மனு கொடுத்த இந்து முன்னணியினர்!
அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் ஆகியோர்களிடம் கோரிக்கை மனு கொடுத்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் சென்று மூலவரிடம் கோரிக்கை மனுக் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடை விதித்ததை அடுத்து தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்து தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவர் மற்றும் நந்தி ஆகியோர்களுக்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர் 
 
இந்த கோரிக்கை மனுவை அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்து கடவுளிடம் கோரிக்கை வைத்திருப்பதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் தஞ்சை பிரகதீஸ்வரர் தான் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்து முன்னணியினர் நம்பிக்கை எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்