செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:27 IST)

ஆளுநர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள் - பின்னணி என்ன?

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அளித்த தேநீர் விருந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நாடெங்கும் நேற்ரு 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதையடுத்து, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுனர் பன்வாரிலால் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இந்த விருந்துக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், முப்படை ராணுவ அதிகாரிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பல விஐபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
 
இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் இந்த விருந்தை புறக்கணித்தனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பதவியேற்றபோது நீதிபதிகளுக்கு உரிய நடைமுறையின் படி இருக்கைகள் அமர்த்தப்படவில்லை. இது நீதிபதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாகவே, ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்து விட்டதாக தெரிகிறது.