Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாணவர்கள் இனி ஒன்றுகூடுவதற்கு சிந்திப்பார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்


Abimukatheesh| Last Updated: திங்கள், 30 ஜனவரி 2017 (21:29 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிலரால் பிரிவினைவாத கோஷங்கள் எழுப்பப்பட்டதால், மாணவர்கள் இனி ஒன்றுகூடுவதற்கு சிந்திப்பார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிலரால் பிரிவினைவாத கோஷங்கள் எழுப்பப்பட்டதால், மாணவர்கள் இனி ஒன்றுகூடுவதற்கு சிந்திப்பார்கள். போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவியதை மாணவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். மாணவர் போராட்டத்தை தேசவிரோத சக்திகள் கேடயமாக பயன்படுத்திக்கொண்டனர்.
 
தமிழக அரசை பின்னால் இருந்து இயக்கும் தேவை மத்திய அரசுக்கு இல்லை. நல்லது எதுவோ அதை மத்திய அரசு செய்து வருகிறது. தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா என்பது குறித்து முதலமைச்சர்தான் பதில் கூற வேண்டும், என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :