திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:52 IST)

சென்னையில் மழை எதிரொலி: கடுமையான போக்குவரத்து பாதிப்பு!

சென்னையில் மழை எதிரொலி: கடுமையான போக்குவரத்து பாதிப்பு!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மணிக்கணக்கில் விடாமல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதல் பெய்து வரும் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக சின்னமலை ராஜ்பவன் சைதாப்பேட்டை மத்திய கைலாஷ் போன்ற பகுதிகளில் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அணிவகுத்து நிற்பதால் அலுவலகம் செல்வோர் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன
 
குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் பலர் தவித்து வருவதையும் காண முடிகிறது என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதையடுத்து கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் பலர் விடுமுறை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன