1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (18:50 IST)

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் மற்ற மாவட்டங்களிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இன்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில்  வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் கொடைக்கானலில் குறைந்தபட்சமாக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கோவை, தர்மபுரி, கரூர், மதுரை, நாமக்கல், சேலம் , திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இனி வரும் நாட்களிலும் அதிக வெப்பம் பதிவாகும் என்றும் எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran