1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (07:28 IST)

நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் மழை.. குளிர்ந்தது சென்னை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

chennai
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் நல்ல மழை பெய்தது. 
 
குறிப்பாக சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.
 
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழை காரணமாக சென்னை முழுவதும் தற்போது குளிர்ச்சியான கர்ப்ப வெப்பநிலை நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாரம் முழுவதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் அதிக வரத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva