திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (14:44 IST)

122 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி

seerkazhi
122 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மிக கனமழை சீர்காழியில் பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சீர்காழியில் நேற்று ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய மழை மேக வெடிப்பு காரணம் அல்ல என்றும் பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாகவே இந்த மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், கோயில்களுக்கும் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது நகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran