வெதர்மேன் கூறியது பலித்தது! சென்னையில் விடிய விடிய மழை

chennai rain" width="600" />
sivalingam| Last Modified புதன், 12 ஜூலை 2017 (05:11 IST)
சென்னையில் நேற்று 1000% மழை பெய்யும் என உறுதியாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அவர் கூறியதால் நேற்று மாலை முதல் பலர் குடையுடன் சென்றனர்.


 
 
வெதர்மேன் கூறியது போலவே நேற்று இரவு சுமார் 9 மணிக்கு தொடங்கிய சாரல், பின்னர் மழையாக மாறி விடிய விடிய பெய்தது. இதனால் சென்னை மக்கள் குளிர்காற்றை நீண்ட நாட்களுக்கு பின்னர் உணர்ந்தனர்.
 
வட சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் சென்னை அருகே உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக, சோழவரம் பகுதியில் 150 மி.மீ மழையும், மிஞ்சூரில் 68 மி.மீ மழையும், கடம்பத்தூர் (திருவள்ளூர்) பகுதியில் 82 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழை இன்னும் ஒருசில நாட்களுக்கு தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :