சென்னையில் இடி மின்னலுடன் விடிய, விடிய கனமழை.. காலை 8.30 மணி வரை மழை பெய்யும் என அறிவிப்பு..!
சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் இன்று காலை 8:30 மணி வரை சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று திடீரென வானிலை மாறி மழை பெய்தது. சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்று பெய்த கன மழை மகிழ்வித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்ந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் 10.3 சென்டிமீட்டர் மழையும், காட்டுப்பாக்கத்தில் 7.7 சென்டிமீட்டர் மழையும், நந்தனத்தில் 6.6 சென்டிமீட்டர் மழையும், பெய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva