வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (15:38 IST)

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

இன்று மாலை 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் அந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததாக தகவல் வெளியானது

அதேபோல் இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது

Edited by Mahendran