வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (16:26 IST)

இன்றிரவு 9 மாவட்டங்களில் கனமழை.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: வானிலை எச்சரிக்கை..!

இன்று இரவு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்  புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்பதால் அன்றைய தினம்  இரு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran