1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (05:50 IST)

தமிழகத்தில் 26ம் தேதி முதல் அதிகரிக்கும் வெப்பம்..! – வெதர்மேன் தகவல்!

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் வெப்பம் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் அக்கினி வெயில் நடந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவான மோக்கா புயல் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வழக்கத்தை விட வெப்பம் சற்று அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மே 26க்கு பின் தமிழ்நாட்டில் வெப்பநிலை வழக்கத்தை விட சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மே 26ம் தேதிக்கு பின் அரபிக்கடல் பகுதியில் ஏற்படும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தரைக்காற்றின் வேகம் அதிகரித்து வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இது ஜூன் 4ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K