புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கேரளாவில் வேகமாக பரவும் தக்காளி வைரஸ்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Radhakrishnan
கேரளாவில் தற்போது தற்போது தக்காளி வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தமிழகத்தில் இதுவரை தக்காளி வைரஸ் பரவ்வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தக்காளிக்கும், தக்காளி வைரஸும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் எனவே தக்காளியினால்தான் தக்காளி வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தமிழகத்தின் தக்காளி வைரஸ் பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை மட்டுமே தாக்கி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது