1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (16:39 IST)

உடல்நல கோளாறு; தா.பாண்டியனுக்கு சிறுநீரக சிகிச்சை

உடல்நல கோளாறு காரணமாக இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் அவர்களுக்கு சிறுநீரக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
 

 
தா.பாண்டியன் அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2 வருடமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கை–கால்கள் வீங்கின.
 
இதனையடுத்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் 2 நாட்களுக்கு அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் திடவ உணவுகளை தவிர்த்து திரவ உணவுகளை மட்டும் உட்கொள்கிறார்