செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:49 IST)

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை!

பெரம்பலூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை ஆசிரியை பிரம்பால் அடித்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சு.ஆடுதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக வண்டார்குழலி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மாணவர்களை பிரம்பால் அடித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வந்த மாணவர்களை அவர் அடித்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.