Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


Abimukatheesh| Last Updated: வியாழன், 14 செப்டம்பர் 2017 (15:33 IST)
செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதுவரை நம்பிகை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 
குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது என திமுக சார்ப்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கு வரும் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. எனவே இதனால் அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :