திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (14:09 IST)

அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

school
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்புகள் சற்று முன்பு வெளியாகி உள்ளன 
 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டன என்பதும் ஏராளமான மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் அரையாண்டுதேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையும் நிலையில் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையில் கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran