செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2024 (13:46 IST)

பாதி மழை.. மீதி வெயில்.. தமிழகத்தை வாட்ட போகும் 4 நாட்கள்! – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Chennai Rain
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சில மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு ஊர்களிலும் ஏற்கனவே வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருவதால் மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கோடைக்காலங்களிலும் வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்வது வழக்கம். அப்படியாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை பெய்தால் உஷ்ணம் கொஞ்சம் குறையும் என்பதால் இது மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்தாலும், அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக வெப்பநிலை 2 டிகிரி வரை உயரவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K