Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெட்டிய திருடன்; அலறிய பெண்; பாய்ந்த போலீஸ்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:56 IST)
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் முடியை வெட்டி திருடன் கைது செய்யப்பட்டார்.

 

 
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்கு காத்துக்கொண்டிருந்த பெண்ணின் முடியை வெட்டிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:-
 
அம்ரோஸ்(33) ஒரு விசித்தரமான பழக்கம் கொண்ட திருடன். ரயில் நிலையங்களில் பெண்களிடம் முடியை வெட்டி எடுத்துச் சென்று விக் வியாபாரிடம் விற்பனை செய்து வந்துள்ளான்.
 
அம்ரோஸ் பிடிப்பட்ட தினத்தன்று, மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்ற பெண் ஒருவரின் முடியை பின் பக்கமாக சென்று வெட்டியுள்ளார். வெட்டிய முடியை பைக்குள் வைக்கும் முன்பு, அந்த பெண் தனது முடி வெட்டப்பட்டதை உணர்ந்து சத்தம் போட்டார்.
 
அங்கு பணியில் இருந்த போலீஸ் உடனே அவரை பிடித்தார். அம்ரோஸ் வெகு நாட்களாகவே இப்படி பெண்களின் முடியை திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :