திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (07:44 IST)

இப்பவே அராஜகம் செய்கிறது திமுக: எச்.ராஜா டுவிட்டால் பரபரப்பு

திமுக ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் செய்வதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திமுக குறித்து பாஜக தலைவர்கள் அவ்வப்போது கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது சகஜமான ஒன்றுதான். குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் அவ்வப்போது திமுக குறித்தும், திமுக தலைவர் குறித்தும் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்வதுண்டு
 
அந்த வகையில் அவர் தற்போது ஒரு டுவிட்டை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாலவாக்கம் விஜிபி பிரதான சாலையில் நேற்றிலிருந்து 2 நாட்களாக அங்குள்ள சி வியூ குடியிருப்பில் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் கூட உள்ளே போகவோ வரவோ முடியாத அளவிற்கு அடைத்து திமுக மேடை போட்டு அடைந்துள்ளனர். 150 கற்கும் மேற்பட்டோர் அங்கு மாஸ்க் அணியவில்லை சமூக இடைவெளி இல்லை இப்பவே அராஜகம். என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் இருசக்கர வாகனம் கூட செல்லமுடியாது என்று எச்.ராஜா பதிவு செய்த புகைப்படத்தில் ஒரு லாரியே போகுமளவுக்கு இடமுள்ளது என்பதும், லாரி ஒன்று போவதும் அந்த புகைப்படத்தில் இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வழக்கம்போல் எச்.ராஜாவின் இந்த டுவிட்டுக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது