திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (08:31 IST)

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறை - திமுக போராட்டம் குறித்து எச் ராஜா ஆவேசம் !

23 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்கலாம் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது வருகின்றன. ஆனால் இந்த சட்டத்திற்கு ஆதரவாக முதன்முதலாக தமிழக பாஜக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் சில நூறு பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘23ம் தேதி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்க்க திமுக முயல்கிறது.  முஸ்லிம் சகோதரர்களையும் மாணவர்களையும் தூண்டிவிட்டு அதில் திமுகவும் காங்கிரசும் குளிர்காய பார்க்கிறது. மோடி பிரதமரான பிறகு இலங்கையில் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. மாணவர்களே காம்பவௌண்ட்டுக்குள் இருந்து கல் வந்தால் வெளியே இருந்து குண்டு வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்’என கூறியுள்ளார்.