1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (17:49 IST)

தமிழக ஆளுனருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு

சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



 
 
இருப்பினும் சமீபத்தில் 'மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை பொறுத்தே இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதா? அல்லது உள்நோக்கம் கொண்டதா? என்பதை முடிவு செய்ய முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.