1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (09:00 IST)

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அவை பின்வருமாறு....  
 
1. நோய்த் தொற்று ஏற்படாத வகையில் வகுப்பறைகள் என பள்ளியில் உள்ள அனைத்து இடங்களையும் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 
 
2. ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அளவு முகக்கவசம் இருப்பதையும், போதுமான அளவு கிருமி நாசினி இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். 
 
3. வகுப்பறையில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இடவசதி இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
 
4. பாடவேளையின் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் முழு கவனத்துடன் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். 
 
5. நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்ட வேண்டும். 
 
6. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்திட வேண்டும். 
 
7. நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெற இருப்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்.