செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:05 IST)

’ஜீவ சமாதி’ அடையப் போகும் பிரபல சாமியார் : பக்தியில் மக்கள் கூட்டம்

நம் நாடு ஆன்மீகத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது. நம் நாட்டில் உள்ள சமயங்களில் பல பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் என உள்ளது. ஆனாலும் இந்தியர்களாக ஒருமித்து உள்ளனர். அதுதான் நமது வளர்ச்சியை தீர்மானிக்கிறது. அந்த ஒற்றுமைதான் வேற்று நாட்டவர்களையும் நம் மீது பொறாமைப்பட வைக்கிறது. 
நம் தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம், பாசங்கரை என்ற கிராமத்தில் வசித்துவருபவர் இருளன் (80). இவர்,  இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குறி, ஜோஷியம், அருள்வாக்குகள் சொல்லுபவராக இருந்துவருகிறார். அதனால் இந்த ஊரில் அவரை எல்லோருக்கும் தெரியும்.
 
இந்த நிலையில், சமீபத்தில், வரும் செப்., 12 நள்ளிரவு முதல் செப்., 13 தேதி அதிகாலை வரைக்குள் தான் ஜீவ சமாதி அடையப் போவதாக எல்லோரிடத்திலும் தெரிவித்துள்ளார். 
 
இந்த ஜீவ சமாதிக்காகவே, அவர்   கடந்த ஒரு மாதமாக, வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 
 
இன்று, அவது ஜீவ சமாதியைப் பார்க்க, பக்தி மயமாக  மக்கள் கூட்டம் கூட்டமாக , பாசாங்கரைக்கு  வந்தவண்ணம் உள்ளனர். இதனால் போலீஸார் இருளன் மற்றும் அப்பகுதியை கண்கணித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.