வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (21:56 IST)

குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த  குரூப்1  நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் நிலைத்தேர்வுகள் நடந்தது. இந்தத் தேர்வை 1  லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இதன் முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இதில், தேர்வானவர்கள்  முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில்,3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட  நிலையில், முதன்மைத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் நடந்தது. கடந்த மார்ச்சில் நடந்த குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுககலள் கடந்த மாடதம் 29 ஆம் தேதிவெளியானது.

இதில்,137 பேர் நேர்முகத்தேர்வுக்கு ததகுதிப்பெற்றனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், இன்று முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.