தாத்தாவை வெட்டிக் கொன்ற பேரன்
சென்னையில் சொத்து பிரிக்கும் தகராறில் நாகராஜ் என்பவர் அவரது தாத்தாவை வெட்டிக் கொன்றார்.
சென்னை எண்ணூர் பகுதியில் பகுதியில் சபாபதி(75) என்பவர் அவரது மூத்த மகள் பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். அவர்கள் பெரியவர்கள் ஆன நிலையில் மூத்த பேரன் நாகராஜ் என்பவர் அவரது தாத்தாவிடம் சொத்துகளை பிரித்து தருமாறு வெகு நாட்களாக பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதனால் சபாபதி, தனக்கு பேரன் நாகராஜால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சபாபதி வீட்டுக்குச் சென்ற நாகராஜ் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது நாகராஜ் திடீரென்று அரிவாளால் சபாபதியை வெட்டியதில், சபாபதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையடுத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.