Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேத்தியின் காதல் விவகாரம் - மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய தாத்தா

Last Modified திங்கள், 5 மார்ச் 2018 (11:06 IST)
தனது பேரனை காதலித்த பேத்தியை அவரது தாத்தா மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரது தாய் சமீபத்தில் மரணமடைந்து விட்டார். அந்நிலையில், அவரது வயிற்றில் சில மாற்றங்கள் ஏற்பட அதுபற்றி உறவினர்கள் விசாரித்துள்ளனர். ஆனால், வேறு ஏதேனும் கூறி அப்பெண் சமாளித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அப்போது அப்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகேட்டு அதிச்சியடைந்த உறவினர்கள் அப்பெண்ணிடம் விசாரித்தனர். அதேபகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோஜ்குமார் தன்னை காதலிப்பதாக கூறி தன்னிடம் உல்லாசம் அனுபவித்தார் என அந்த சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
 
மனோஜ்குமாரிடம் போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு தான் மட்டும் காரணமல்ல. தனது தாத்தா மோசஸ்(65) என்பவரும் இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவலை மனோஜ்குமார் கூறினார்.
 
இதையடுத்து அந்த சிறுமியிடன் போலீசார் விசாரித்தனர். அதில், தன்னுடைய காதலுனுடன் பேச தனது தந்தையின் சித்தப்பா மோசஸ் செல்பொனை தான் பயன்படுத்தியதாகவும், அதன் மூலம், மனோஜ்குமாருடன் தான் உல்லாசமாக இருந்தது மோசஸிற்கு தெரிய வர, அதை வெளியே கூறாமல் இருக்க தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி அச்சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மனோஜ்குமாரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
 
எனவே, மனோஜ்குமார் மற்றும் மோசஸ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அந்த சிறுமிக்கு குழந்தை பின், டி.என்.ஏ சோதனை செய்து அக்குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
மனோஜ்குமார் மற்றும் அந்த சிறுமி என இருவருக்கும் மோசஸ் உறவினராக இருந்துள்ளார் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :