1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (11:27 IST)

துப்புரவுப் பணிக்கு சேர்ந்துள்ள பட்டதாரி இளைஞர்கள் ...

துப்புரவுப் பணிக்கு சேர்ந்துள்ள பட்டதாரி இளைஞர்கள் ...

தமிழகத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவைத்துவிட்டு, அரசு வேலைக்காகக் காத்துள்ளனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணிக்கு பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.
 
கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், இந்தப் பணியிடங்களுக்கு இளைஞர்கள் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
 
இதில், பெரும்பாலானாவர்கள், இளங்கலைப் பட்டப்படிப்பும் முதுகலைப் படிப்பு முடித்த இளைஞர்களாக இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த நவம்பரில் நேர்காணல்,நடைபெற்றது. இதில், எம்.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்துள்ள மோனிகா என்ற பெண் துப்புரவு பணியில் சேர்ந்துள்ளார். மேலும் ,இவருக்கு மாதம் ரூ, 20 ஆயிரம் முதல் ரூ. 25000 வரை சம்பளம்ம் கிடைக்கலாம் என தகவல் வெளியாகிறது.
 
இப்படிப்பிற்கு எழுதப்படிக்கத்தெரிந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையில்லா திண்டாட்டத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிறது.