1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (09:20 IST)

எத்தனை மாதங்கள் சனிக்கிழமைகளில் அரசு அலுவலங்கள் இயங்கும்? தமிழக அரசு அறிவிப்பு

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக அரசு அலுவலங்கள் உள்பட பல்வேறு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் தமிழக அரசின் அனைத்து அலுவலங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது 
 
ஆனால் தற்போது தினமும் 100 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கி வருவதால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை 
 
ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுமுறைகளை கணக்கில் கொண்டு தமிழகத்தில் அரசு அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரும் சனிக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகம் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது