புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (11:06 IST)

பட்டாசு கடை விபத்து எதிரொலி; பட்டாசு கடைகளில் ஆய்வு!

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் பல்வேற் இடங்களில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளியையிட்டி கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்ட பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளிம் பாதுகாப்பு வசதி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரம்பலூரில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், சீன பட்டாசு, நாட்டு பட்டாசுகளை விற்க கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.