Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மஸ்கோத் அல்வாவிலிருந்து பீமபுஷ்டி அல்வாவாக மாறிய ஆளுநர் உரை!

Last Modified புதன், 10 ஜனவரி 2018 (18:50 IST)
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தது.
 
இந்நிலையில் ஆளுநரின் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுனர் உரையை வழக்கமாக மாநில அரசு தயாரித்து வழங்கும். ஆனால் இந்த உரையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை பாராட்டியிருப்பதைப் பார்க்கையில், மத்திய அரசு தயாரித்த அறிக்கையோ என தோன்றுகிறது. மொத்தத்தில் ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது என கூறினார்.
 
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் ஆளுநர் உரை மீதான இந்த மஸ்கோத் அல்வா விமர்சனத்துக்கு அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பா பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஆளுநர் உரை என்பது மஸ்கோத் அல்வா இல்லை, மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை கொண்ட பீமபுஷ்டி அல்வா என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :