சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (00:49 IST)
சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஆளுநரை சந்தித்த பின் கூறியுள்ளார்.

 

தமிழக அரசியல் நிலவரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.

இதனால், தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். இதனால், சசிகலா - பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்து பேசினார். ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பின் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :