Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:58 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்துள்ள ஆளுநர் மாலை 5 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வத்தையும், இரவு 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.

 


இந்த சந்திப்பில் இரு தரப்பு கருத்துகளும் கேட்டப்பின் தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ப சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை அளுநர் முடிவு செய்வார். ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவது குறித்து பேச உள்ளார். சசிகலா அவரது பதவி ஏற்பு குறித்து பேச உள்ளார்.

ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக மக்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :