1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (13:09 IST)

ஆளுனர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் ஒரே மசோதாவா? இதோ விவரங்கள்..!

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒரு சில மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் என்ற தகவல் சற்றுமுன் வெளியான நிலையில் அந்த மசோதாக்கள் என்னென்ன என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகி உள்ளன. 
 
1. சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா 
 
2 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா 
 
3 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா 
 
4 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 
 
5 தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்  திருத்த மசோதா 
 
6 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 
 
7 தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 
 
8 தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 
 
9 தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 
 
10 தமிழ்நாட்டில் புதிய சித்த மருத்துவக் கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 
 
இந்த பத்து மசோதாக்களிலும் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிப்பதற்கு பதிலாக அரசே நியமிக்கும் கோரிக்கை விடப்பட்டது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க ஒரே ஒரு மசோதா இயற்றினால் போதும் என்ற நிலையில் அவை 10 மசோதாக்களாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva