புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (07:44 IST)

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஆளுனர் உரை சிறப்பம்சங்கள்!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. தொடக்க உரையாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பேச தொடங்கியபோது திமுகவினர் பேச வாய்ப்பளிக்குமாறு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறினர்.

பிறகு தனது உரையை வாசித்த ஆளுனர் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும். தமிழக மக்கள் எந்தவொரு சமயத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறியுள்ளார்.

மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம், சேலம் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்குதல், நாகப்பட்டிணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல், கொசுவலைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆளுனர் பேசியுள்ளார்.