Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வர் ஓ.பி.எஸ் ராஜினாமா ஏற்பு - கவர்னர் அறிவிப்பு


Murugan| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:54 IST)
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

 

 
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவசரமாக சென்னை திரும்பிய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் ராவ், ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வராக தொடர வேண்டும் என ஆளுநர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
எனவே, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கும் வரை, பன்னீர் செல்வமே முதல்வராக தொடர்வார்.


இதில் மேலும் படிக்கவும் :