1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (10:10 IST)

பதவி போய்விட்டதால் பழிவாங்கும் அமைச்சர் : கரூர் மக்கள் கொந்தளிப்பு

தனக்கு பதவி போய்விட்டது என்பதற்காக அதிமுக முன்னாள் மந்திரி செந்தில் பாலாஜி, தங்களை பழிவாங்குவதாக கரூர் மக்களை கொந்தளித்துள்ளனர்.


 

 
மேலும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரியை சட்டமன்றத்தில் அறிவித்த இடத்திலேயே அமைக்க வேண்டும் என்றும், கரூரை அடுத்த வாங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் நிறைவேற்றிய  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கா விட்டால் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
 
தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பதை உறுதியளித்ததையடுத்து, கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்லைமேடு என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் விவசாய நிலத்தில் அமைப்பதாக கூறப்பட்டது.
 
மேலும் அந்த நிலத்தை தனியாரிடமிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி இயக்குநர் சென்னை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யததுடன், இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று கட்டுமான பணிக்கான ஒப்பந்தமும் விடப்பட்டது. 
 
இந்நிலையில் இப்பகுதியில் பூமி பூஜை நடைபெறுவதாக இருந்த நிலையில் சில அரசியல் வாதிகள் அவற்றை தடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முயல்வதாக கூறப்படுகிறது.
 
எனவே இதைபற்றி விவாதிக்க, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 8 கிராமங்களை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு ஊர் கூட்டம் நடைபெற்றது. 
 
அதில் தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்த இடத்திலேயே அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்றும்,  இது தொடர்பான கோரிக்கை மனுக்களை  முதல்வரின் தனிபிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு புகார் அளிக்க போவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
 
அவ்வாறும் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் குடும்ப அட்டையையும், வாக்காளர்கள் அட்டையையும் அரசுக்கு திருப்பி அனுப்பபோவதாகவும், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும், அப்போதும் நடவடிக்கை எடுக்கைவில்லை எனில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
 
மேலும் ஏற்கனவே இருந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தனது பதவி பறிப்பையடுத்து அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் கரூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
ஏனென்றால் அவர்களுக்கு நாங்கள் ஓட்டு போட்டது நல்ல திட்டங்களை கொண்டு வரத்தான். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி போயிருச்சே என்ற பாணியில் எங்கள் ஊர் மக்களை பழிவாங்கினால் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தவும் தயார் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.