ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (17:13 IST)

துப்புரவுத் தொழிலாளி பிறந்தநாளை கொண்டாடிய அரசு மருத்துவமனை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முத்துச்சாமி என்ற துப்புரவுத் தொழிலாளியின் பிறந்தநாள் மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முத்துச்சாமி என்பவர் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிகிறார். அவர் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
 
இந்நிலையில் அவரின் ஆவணங்களை மருத்துவர் எஸ்.சேரலாதன் பார்த்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையை பார்த்தபோது இன்று முத்துச்சாமிக்கு 60வது பிறந்தநாள் என்பது தெரியவந்துள்ளது.
 
உடனே மருத்துவர் கேக் ஒன்றை வாங்கி வருமாறு கூறியுள்ளார். அந்த கேக்கை முத்துச்சாமி வெட்டி தனது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். 
 
இதுகுறித்து அந்த மருத்துவர் சேரலாதன் கூறியதாவது:-
 
சக மனிதர்களை மதிக்க தெரிந்தால் போதும் அவரோட பிறந்தநாளே அவருக்கு தெரியவில்லை. ஒய்வு பெற உள்ள நிலையில் அவரை சந்தோஷப்படுத்த நினைத்தேன். 
 
முத்துச்சாமி உடல்கூறு ஆய்வுப் பிரிவில் இருப்பவர். இந்த பணியில் இருப்பவர்களின் கஷ்டம் எங்களுக்கு நன்றாக தெரியும். ஓய்வு பெறும் அவருக்கு மாவட்ட ஆட்சியர் கையால் விருது பெற வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக அவரின் பெயரை சிறந்த பணியாளர் விருத்துக்கு பரிந்துரை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.