Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா?: தலைமை செயலகத்தில் பரபரப்பு!

அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா?: தலைமை செயலகத்தில் பரபரப்பு!

சனி, 4 பிப்ரவரி 2017 (09:00 IST)

Widgets Magazine

தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து வந்த ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றனர். இதனால் தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
கடந்த 2012-ஆம் அண்டு தமிழகத்தின் 41-வது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். இவரது பதவிக்காலம் 2014-ஆம் ஆண்டுடன் முடிவடைந்து அவர் பணி ஓய்வு பெற்றார்.
 
ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசின் ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி அதில் அவரை உட்கார வைத்தார். ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அரசு இயந்திரமே இவரால் தான் இயங்கியது.
 
கிட்டத்தட்ட நிழல் முதல்வராகவே வலம் வந்தார் இவர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கி வந்தார் ஷீலா பாலகிருஷ்ணன்.
 
அவரது பணிக்காலம் வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வரும் தகவலால் பல சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வேலையை மாற்றிக் கொள்வோமா? ட்ரம்புக்கு அர்னால்ட் சவால்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளூநர் அர்னால்ட ஆகியோர் ...

news

70 கி.மீ வேகத்தில் வந்த ரெயிலை நிறுத்திய டிரைவர்: உயிர் தப்பிய பெண் (வீடியோ)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி மும்பையில் 70 கி.மீ வேகத்தில் வந்த புறநகர் ரெயிலை ...

news

மக்களோடு மக்களாக உணவு அருந்திய ஓ.பி.எஸ்...

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...

news

அழகிய பெண்களின் மொபைல் எண்கள் ரூ.500க்கு விற்பனை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொபைல் ரீசார்ஜ் கடைகளில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் ...

Widgets Magazine Widgets Magazine