ரவுடிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள், கூவத்தூர்; எம்எல்ஏ ஆளுநருக்கு கதறல் கடிதம்!

Sasikala| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:59 IST)
ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு யாரும் தாவிவிடக்கூடாது என்பதற்காகவும், தான் முதல்வர் பதிவியேற்க எந்த தடையும்  வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், சென்னை அருகில் உள்ள கூவத்தூரில் சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்களை  தங்க வைத்திருந்தார், சசிகலா. 

 
கூவத்தூர் தீவு சொகுசு ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்களை சசிகலா அடியாட்கள் கடத்தி அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் பன்னீர்செல்வம் புகார் கூறினார். ஆனால் சசிகலா தரப்பில் நாங்கள் கடத்தி வைக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகவே  உள்ளனர் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், கோல்டன் பே ரிசார்ட் துண்டு சீட்டில், அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., க்களில் ஒருவர் பணியாளர்கள்  மூலம் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடிதத்தில், நாங்கள் ரவுடிகளால்  கொடுமைப்படுபத்தப்பட்டு வருகிறோம். டி.வி., செல், பேப்பர் என எதுவும் இல்லை. ரவுடிகள் அடிக்கடி துன்புறுத்துவதோடு,  மிரட்டுகின்றனர்.

 
நேற்று ஒரு எம்.எல்.ஏ. நண்பரை ரவுடிகள் அடித்ததில் வயிற்றுவலி, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார்.  எனவே ரவுடிகளிடம் இருந்து எங்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கண்ணீருடன், கதறி எழுதியிருந்தார்.  இந்த கடிதம் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :