வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:02 IST)

கூகுளில் தேடினால் கூட அதிக விவரம் கிடைக்கும் - நீதிமன்றம் அதிருப்தி

குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது காவல்துறை சம்ர்ப்பித்த ஆவணங்களைக் கண்டு நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவர் காணாமல் போனதைக் கண்டுபிடிக்கக் கோரி எக்ஸ்னோரா என்ற அமைப்பு வழக்கு ஒன்று தொடர்ந்தது. இது சம்மந்தமான விசாரணையில் நீதிமன்றம் குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான விவரங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் சம்ர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கடந்த 2 ஆண்டுகளில் 9822  குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 9177 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள குழந்தைகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக இதுவரை 4824 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 4808 பேர் ஜாமீன் பெற்று வெளியே சென்றுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள்   சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு ‘கூகுளில் தேடினாலே இதைவிட அதிகமான தகவல்கள் கிடைக்கும்’ என்று கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என அக்டோபர் 25-ந் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.