1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (13:45 IST)

சினிமாவிற்கு குட் பை.. இனி முழு நேர அரசியல்! – விஜய் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Thamizhaga Vetri Kazhagam
புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், சினிமாவிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு பரபரப்புகள், விவாதங்கள் நடந்து வந்த சூழலில் இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்தே விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய்.

தனது அரசியல் ஆர்வத்தின் காரணம், நோக்கம் குறித்தும் 3 பக்கத்திற்கு நீளமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். அதில் தனது நோக்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் வரும் சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சி செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


மேலும் தற்போது கட்சி தொடங்கியுள்ள நிலையில் தான் ஒப்புக்கொண்டுள்ள படங்களை கட்சிக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், அதுவே தமிழக மக்களுக்கு தான் செய்யும் நன்றிக்கடன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதனால் வெங்கட் பிரபு இயக்கும் க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திற்கு பிறகு விஜய் நடிக்க உள்ள படம் அவரது கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு முழு நேர அரசியல் பணிகளில் நடிகர் விஜய் ஈடுபட உள்ளதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விஜய் எந்த படமும் நடிக்கப்போவதில்லை என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K