திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (14:53 IST)

கோகுல் ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

தமிழகத்தையே உலுகிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த நிலையில் 10 பேரும் சென்னை உயர்நன்றதில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கின் வாதங்கள் கடந்த சில மாதங்களாக முடிவு இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
 
 இந்த தீர்ப்பில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது என்றும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து கோகுல்ராஜ் வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து யுவராஜ் உள்பட 10 பேரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva