1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:14 IST)

யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை

பொறியியல் பட்டதாரி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் யுவராஜூக்கு இன்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மருத்துவர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.


 

 
மூன்று மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த யுவராஜ், கடந்த ஞாயிற்றுக் கிழமை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

இந்நிலையில், சரணடைந்த யுவராஜை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த திருச்செங்கோடு ரயில் பாதை மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு யுவராஜை அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தநிலையில் இன்று, அவருக்கு உடல் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவப் பரிசோதனையை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மருத்துவர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.