1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (11:58 IST)

அரசாணைகள் அனைத்தும் தமிழில்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசாணைகள் சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அரசாணைகள் சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழக அரசு தமிழில் தயாரித்து வெளியிட
வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை ஐகோர்ட்டில் பழனி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசு தயாரித்து வெளியிடும் அரசாணைகள் சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரும் இந்த மனுவுக்கு வரும் மார்ச் 29 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது 
 
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இதற்கு தகுந்த பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசிடம் இருந்து வெளிவரும் அரசாணைகள் உள்பட அனைத்தும் தமிழில் தான் வெளிவர வேண்டுமென்று என்ற பல ஆண்டுகால கோரிக்கைக்கு இந்த வழக்கின் மூலம் தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்