1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (10:45 IST)

அதிமுக-பாஜக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தும் ஜிகே வாசன்.. முயற்சி பலிக்குமா?

gk vasan
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் வெளியேறிய நிலையில் மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் ஜிகே வாசன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோர்களை சந்தித்த நிலையில் நேற்று அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் சேர்வது என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுகவையும் பாஜக கூட்டணியில் சேர்க்க அவர் முயற்சித்து வருவதாகவும் அதன் காரணமாகத்தான் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித உறுதி மொழியும் தரப்படவில்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதற்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை அதிமுக தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது

Edited by Siva