1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (12:59 IST)

நிர்பயா போல் ஓமலூரில் அதிர்ச்சி சம்பவம் - 15 வயது சிறுமியை மாறி மாறி கற்பழித்த கும்பல்

ஓமலூருக்கு அருகே ஒரு சிறுமியை பேருந்தில் வைத்து ஒரு கும்பல் கற்பழித்த விவகாரம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லியில் பேருந்தில் வைத்து நிர்பயா என்ற பெணை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி கற்பழித்த விவகாரம் நாடெங்கும் அதிர்சிச்யை ஏற்படுதிய நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் ஓமலூர் அருகே நடைபெற்றுள்ளது.
 
சேலத்திலிருந்து ஓமலூருக்கு அருகே உள்ள நார்ணம்பாளையம் எனும் கிராமத்திற்கு ஒரு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.  நேற்று இரவு 10 மணிக்கு மேல் நார்ணம்பாளையத்தில் பயணிகளை இறக்கி விட்ட அந்த பேருந்து ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது.
 
அந்நிலையில், அந்த பேருந்திலிருந்து 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அலறிய படி வெளியே ஓடி வந்துள்ளார். அதைக் கண்ட அந்த கிராம மக்கள் அவரிடம் விசாரித்த போது, பேருந்திற்குள் 3 பேர் தன்னை கற்பழித்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தில் இருந்த மூன்று பேரையும் அடித்து உதைத்ததோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
 
போலீசார் நடத்திய விசாரணையில், 10ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, சேலம் பழைய  பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து நார்ணம்பாளையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.
 
அழுதபடியே இருந்த அந்த சிறுமியிடம் அந்த பேருந்தின் நடத்துனர் பேச்சு கொடுத்துள்ளர். இதில் அந்த சிறுமி, பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்துவிட்டதை தெரிந்துகொண்ட அவர் மற்றும் இரண்டு டிரைவர்கள், அந்த சிறுமியை பேருந்திலேயே அமர வைத்து, சேலத்திற்கும், நார்ணம்பாளையத்திற்கும் நாள் முழுவதும் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து பயணிகளையும் இறக்கிவிட்ட பின், அவர்களுக்கு ஏற்பட்ட சபலம் காரணமாக அந்த சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளனர். இதனால் அந்த சிறுமி சத்தம் போடவே, வாயில் துணியை திணித்து, அவர்கள் மூவரும் அப்பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர். அதன்பின்புதான், அந்த சிறுமி பேருந்தில் இருந்து வெளியே ஓடி வந்த போது, அந்த ஊர் மக்கள் அவரை பார்த்துள்ளனர்.
 
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.