செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (20:26 IST)

நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.! தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு..!!

Child Death
திருச்சி அருகே பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது மகள்  ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 
நேற்று இரவு மாணவி ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்த நூடுல்ஸை சாப்பிட்டு  படுத்துவிட்டார். நீண்ட நேரமாகியும் காலை அவர் எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியின் உடலை  கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.   


திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.