வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 நவம்பர் 2018 (15:43 IST)

ஆள் வந்ததால் அப்படியே விட்டு ஓட்டம்: பலாத்காரத்தின் விளைவாக மாணவி பலி

தருமபுரி அருகே பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். தற்போது இந்த மாணவி மரணமடைந்துள்ளார். 
 
தீபாவளிக்காக ஊருக்கு வந்த மாணவியை ரமேஷ் மற்றும் சதீஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். பாலத்கார முயற்சியி போது மாணவி தப்பிக்க முயன்ற காரணத்திற்காக மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். 
 
தாக்குதலுக்கு பின்னர் பாலாத்காரம் செய்ய முயன்ற போது ஆள் வரும் சத்தம் கேட்டதால் அப்படியே விட்டு ஓடிவிட்டனர். பின்னர் அந்த மாணவி மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்த சம்பவம் நடந்து முடிந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலாத்கார முயற்சி மற்றும் கொலை என இரு பிரிழுகளில் வழக்கு பதியப்பட்டு ரமேஷ் மற்றும் சதீஷ் தேடப்பட்டு வருகின்றனர். 
 
இதில் கொடுமை என்னவெனில் ரமேஷ் மற்றும் சதீஷ் அந்த மாணவியின் உறவினர்கள் ஆவர்.